மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பசார்கான் கிராமத்தில் வசித்து வரும் நபர், திருமணமாகி தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
மது போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு, தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். வழக்கம்போல், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி அன்றும் குடித்துவிட்டு வந்த அந்த நபர், தனது மனைவி மற்றும் மாமியாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது மாமியாருடன் தவறான முறையில் நடந்துக் கொண்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவரது மாமியார், கற்களை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அந்த நபர், ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்த நாள் அவரது சடலத்தை மீட்ட போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.