“இதப் பண்ணுங்க.. 6 லட்சம் தரேன்” – ஜப்பான் அரசு எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் உலக நாடுகள்!

கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கிராமத்தில் வசிக்கும் மக்கள், நகரத்தை நோக்கி இடப்பெயர்ச்சி செய்கின்றனர். இந்த முறை இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வழக்கமாகவே உள்ளது. இதன்காரணமாக, நகரங்களில் பெருமளவில் மக்கள் தொகை அதிகரிக்கிறது.

இதனை தடுக்கும் விதமாக, ஜப்பான் நாட்டில் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வசிக்கும் மக்கள், அப்பகுதியில் இருந்து வெளியேறி, வேறொரு பகுதியில குடி அமர்ந்தால், அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ரூபாய் 1 மில்லியன் யென் ( ரூ.6,33,000 ) என்ற கணக்கில் பணம் வழங்கப்படுகிறது.

2 குழந்தைகளை கொண்ட ஒரு குடும்பத்திற்கு, 3 மில்லியன் யென் ( ரூ.18,99,000 ) வழங்கப்படுகிறதாம். வேறொரு பகுதியில் புதிய தொழில் செய்து பிழைப்பதற்கு அந்த பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டோக்கியோவில் இருந்து வெளியேறி, குடி அமர்த்தப்பட்ட புதிய பகுதியில், 5 வருடங்களுக்காவது வசிக்க வேண்டும்.

அப்படி 5 வருடங்களுக்கு முன்னரே, டோக்கியோவிற்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அரசு வழங்கிய பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜப்பானின் இந்த புதிய அறிவிப்பு, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News