மேற்கு வங்க மாநிலம் மல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அஃப்சல் மோமின். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ரத் பாரி கிராம பஞ்சாயத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் வசித்து வரும் கிராமத்தில், இளைஞர்கள் சிலர், DJ வைத்து, சத்தமாக பாடல் கேட்டு, நடனம் ஆடி வந்துள்ளனர்.
இதனால் கடுப்பான அப்பகுதி மக்கள், அந்த இளைஞர்களிடம் சத்தத்தை குறையுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து கிளம்பி சென்ற அவர்கள், மீண்டும் அன்று இரவு DJ வைத்து அட்டகாசம் செய்துள்ளனர். இதனை தாங்க முடியாத அஃப்சல் மோமின், அவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த இளைஞர்கள், அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். முதியவரை இளைஞர்கள் அடித்தே கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.