வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என பிரபலங்கள் பலரும் பேசி இருந்தனர். இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது : நடிகர் ரஜினிகாந்த் தனது கடின உழைப்பின் மூலமும், பல வெற்றி படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர். பல தயாரிப்பாளர்களை காப்பாற்றியதால் தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆனர். அவருடைய படங்கள் நஷ்டம் ஆனாலும் அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து உதவுவார் ரஜினி.
ரஜினி இருக்கும்போதே இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அப்படி இருக்கையில் எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்? என அவர் பேசினார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் – அஜித் இருவரும் சமம். பிகில், வலிமை, விவேகம், மெர்சல் போன்ற படங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக மெர்சல் படத்தை எடுத்த தயாரிப்பாளரால் அதன்பின் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. அப்புறம் எப்படி நீ நம்பர் 1-ஆ இருக்க முடியும் என அவர் பேசியுள்ளார்.