பம்பை நதியில் பாக்டீரியாக்கள் : அதிர்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்..!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம்.

இந்நிலையில், பம்பை நதியில் கோலிபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பம்பை நதியில் கோலிபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000-க்கும் மேல் கடந்துள்ளது. இதற்கு, பம்பை நதியில் குளிப்பதும் அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News