மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வாடிவாசல் பகுதிகளில் வர்ணம் பூசும்பொனிகள் தொடங்கப்பட்டது.
இந்த பணிகளை மாவட்ட துணை ஆட்சியர் தியான் சூ நிஹம் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்துமிடம், பார்வையாளர் மாடம், முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படும் சுகாதார வளாகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
தொடர்ந்து விழா கமிட்டியினர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி ஜல்லிக்கட்டு விழா குழுவினர் பாலமேடு. பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள்உட்பட பலர்கலந்து கொண்டனர்.