செம்மரக் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது..!

சசிகலாவின் உறவினர் பாஸ்கர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். அதனை பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு பாஸ்கரனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News