கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணியின் இரண்டு நாள் நடைபயணம் துவங்கியது. நெய்வேலி அருகே வானதிராயபுரம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்துடன் நடை பயணம் துவங்கியது.
இன்று வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை நடைபெறுகின்றது.
என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது,. சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.