சிங்கம்புணரி ஊராட்சி,ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கே ஆர் பெரிய கருப்பன் கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு.. 3 கோடி 64 லட்சம்… மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடந்த 2022 கலைத் திருவிழா நிகழ்ச்சியில் சிங்கம்புணரி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி களிமண் சிற்பம் செய்து மாநில அளவில் முதல் பரிசினை பெற்ற மாணவிக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவித்தார்.