செங்கல்பட்டு மாவட்ட கிராமிய காவல் நிலையத்திற்குட்பட்ட புலிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. காவல்துறையினரை கண்டதும் இரு இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர்.
காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டபோது சிவகங்கை மாவட்டத்தைச் ரஞ்சித், மற்றும் அபினேஷ்வரன் என்பது தெரியவந்தது. மேலும் இரு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புலிப்பாக்கம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்தும் இருவரும் ஒரு கிலோ 1கிலோ 200 கிராம் எடைஉள்ள கஞ்சா பொட்டலங்களை தனித்தனியாக பிரித்து விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் உள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.