பாஜகவில் இருந்து விலகிய லஷ்மி ராமகிருஷ்ணன் – உண்மை என்ன?

பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன். திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது “Are You Ok Baby” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் பாஜகவில் இதுவரை இணையவே இல்லை.. அப்படி இருக்கும்போது, நான் அந்த கட்சியில் இருந்து எப்படி விலக முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது தான் இன்றைய பத்திரிகைகளின் வேலையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அண்ணாமலை சொல்வது சரிதான் என்று கூறிய அவர், ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளாத வரை, மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதி, ஊடகங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News