டெல்லி அடார்ஷ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 43 வயதுடைய பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, அந்த பெண்ணிற்கும், அவரது கணவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு காரணமாக, சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மனம் உடைந்த அவர், வீட்டின் கழிவறைக்கு சென்று, தனது மார்பகத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.
பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவரும், குழந்தைகளும், கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக, பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.