நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூரில் விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை அதிகாலை 4-00 மணிக்கு உலகம் முழுவதிலும் வெளியிடப்படுகிறது. மேலும் அஜித் குமார் நடிக்கும் துணிவு படமும் நாளை வெளியிடப்படுகிறது.
9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் இதனால் அஜித்,விஜய் ரசிகர்கள் இரண்டு படங்களுமே வெற்றி பெற வேண்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விஜய் மக்கள் இயக்கம் திருச்செந்தூர் ஒன்றியம் சார்பில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் விஜய் படத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்..