பிரதமர் மோடியின் மருத்துவச் செலவுகள் குறித்து வெளிவந்துள்ள முக்கிய தகவல்

கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்காக, ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ளார். வரிசெலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், இது ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News