மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசிக்கும் 25 வயதான பெண்ணுக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருந்த நிலையில் 2-வது குழந்தையும் பெண்குழந்தையாக பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 29 அன்று குழந்தையை கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
குழந்தையின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையை கொலை செய்த தாயார் தான் ஒன்றும் செய்யாதது போல மிகவும் இயல்பாக இருந்துள்ளார். இதையடுத்து போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.