உத்தரபிரதேச மாநிலம் கோந்தா மாவட்டத்தில் உள்ள அரவிந்த் நகரை சேர்ந்த பெண், தனது கணவர் உயிரிழந்த நிலையில், 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பின்னர், சங்கர் தீக்சித்துடன் பழகி வந்த அப்பெண், அவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2021-ஆம் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று, அந்த பெண் தனது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த சங்கர் தீக்சித், தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியின் தாயார், சங்கர் தீக்சித்திடம் இருந்து தனது மகளை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சங்கர் தீக்சித் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சங்கர் தீக்சித்திற்கு, 6 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.