அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பதால், ரசிகர்களின் விமர்சனங்களை பெறுவதற்கு, யு டுயூப் சேனல் முதல் சேட்டிலைட் சேனல்கள் வரை, திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
அப்போது, ரோகினி திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டங்களை வீடியோவாக எடுப்பதற்காக, SS Music என்ற சேனலின் ஊழியர்கள் ட்ரோன் கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இதனை கண்ட திரையரங்கு தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல், உயிர்களுக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில் இயந்திரங்கள் இயக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரமேஷ், ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.