ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜுக்னு. இவர், சாதர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது, 12 பேர் வழிமறித்துள்ளனர்.
முகத்தை மூடியபடி வந்த அந்த மர்ம நபர்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம், ஜுக்னுவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கையை வெட்டிய அந்த மர்ம கும்பல், கீழே விழுந்த அந்த கையை, தப்பியோடும்போது, எடுத்துச் சென்றுள்ளது.
இதனால் அலறித்துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, லோக்நாயக் ஜெயபிரகாஷ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அங்குஷ் கமல்பூர் என்பவருடன் ஏற்பட்ட பகையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 12 பேர் சேர்ந்த ஒருவரது கையை வெட்டியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.