74 குழந்தைகளுக்கு தந்தை.. வெளிநாட்டு பெண்களுக்கும் தானம்.. உண்மையான தாராள பிரபு இவர்தான்..

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே கோர்டி. 31 வயதான இவர், குழந்தை இல்லாமல் தவித்து வரும் பெண்களுக்கு, விந்தனு தானம் மூலமாக குழந்தை அளித்து வருகிறார். விந்தனு தானம் செய்ததின் மூலமாக, இதுவரை 57 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.

மேலும், இவரது விந்தனு தானம் மூலம் உருவான 14 குழந்தைகள் பிறப்புக்கு தயாராகி வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கும், இவர் விந்தனு தானம் செய்து வருகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள கைலே கோர்டி, குழந்தை இல்லாமல் போராடும் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கோடு இதனை இலவச சேவையாகச் செய்துவருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விந்தணு நன்கொடை செய்வதைத் தவிர்த்து, வேறு பாலியல் தொடர்பு என்பது தனக்கு இல்லை என்றும், விந்தணுவை பாதுகாக்க விரும்புவதால்தான் பாலியல் உறவை வைத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த தமிழ் அறிந்த இணையவாசிகள், ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு படத்தை ஒப்பிட்டு, இவர் தான் உண்மையான தாராள பிரபு என்று வர்ணித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News