ஆளில்லாத இடத்தில் தனிமையில் இருந்த காதல் ஜோடி.. கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், தனியார் கல்லூரியில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில், வேறொரு படப்பிரிவில், 20 வயது பெண் ஒருவர், இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த இருவரும், காதலித்து வந்துள்ளனர்.

குண்டுகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே இருவரும் சந்திப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு காதலர்கள் இருவரும் சந்தித்து, தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 5 பேர், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், பாலியல் வன்கொடுமை செய்தது, ஊமை மணிகண்டன், விமல், ஊக்கு சிவகுமார், தென்னரசு, விக்னேஷ் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News