அஜித்தின் துணிவு திரைப்படம், கடந்த 11-ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாதி அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும், இரண்டாம் பாதி, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும ஏற்ற வகையிலும், எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பண மேலான்மை குறித்து, முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை பேசியுள்ளதாகவும், இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், படத்தின் எடிட்டிங்கின்போது, நடந்த சுவாரசிய சம்பவத்தை, படத்தொகுப்பாளர் விஜய் வேலு குட்டி பகிர்ந்துள்ளார்.
அதாவது, துணிவு படத்தில் இடம்பெற்ற வாட்டர் பைக் சேசிங் காட்சி, 5 நிமிடம் மட்டுமே, திரையில் வரும். ஆனால், அந்த காட்சியை எடிட் செய்வதற்கு மட்டும் 25 நாட்கள் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் எச்.வினோத் முழுமையாக திருப்தி அடையும் வரை, அந்த காட்சியை தொடர்ந்து எடிட் செய்துக் கொண்டே இருந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.