உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்த பெண், சனி மௌரியா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, நாட்கள் செல்ல செல்ல மோசமாகியுள்ளது.
அதன்பிறகே, சனி மௌரியாவின் உண்மையான பெயர் சந்த் முகமது என்பதும், அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக, தனது மத அடையாளத்தை மறைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும், தனது மனைவியை தொடர்ந்து சித்ரவதை செய்த அவர், இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். இதுமட்டுமின்றி சிகரெட்டால் சூடு வைத்தும், கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றியும், கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக, அந்த பெண் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தபோது, வயிற்றில் எட்டி உதைத்ததில், அவரது கர்ப்பம் கலைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க அந்த பெண் பலமுறை முயற்சி செய்தபோதும், அவரை தடுத்து நிறுத்தி, அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இந்த கொடுமைகளை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், கணவர் வீட்டில் இருந்து தப்பித்துள்ளார். விரைவில் அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார் என்று இந்திய டுடே வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.