உடலுறவின்போது விபரீத ஆசை.. வெள்ளம் போல் வெளியேறிய ரத்தம்.. மனைவி பலி.. போலீசார் அதிர்ச்சி..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ். 50 வயதான இவருக்கு, ஏற்கனவே 2 திருமணமான நிலையில், 3-வதாக ஏசுராணி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இரவு மனைவியுடன் தூங்கிய வனராஜ், காலையில் மனைவி இறந்து கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த ஏசுராணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த அவர்கள், வனராஜிடம் விசாரணை நடத்தினர்.

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறி, வனராஜ் காவல்துறையினரையே, அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அதாவது, குழந்தைகள் இருவரும் தூங்கிய பிறகு, மது அருந்திய ஏசுராணியும், வனராஜ்-ம், உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது என்று ஏசுராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விடாமல் டார்ச்சர் செய்த வனராஜ், தனது மனைவியின் பெண்ணுறுப்பில் டார்ச் லைட்டை அழுத்தியுள்ளார். இதனால் அலறித்துடித்த ஏசுராணி அதிக ரத்தம் வெளியேறி இறந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், வனராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவனின் விபரீத ஆசையால், மனைவி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News