ஏழை மக்களுக்கு ஜூன் மாதம் காத்திருக்கும் ஆபத்து? – ஒத்துக் கொண்ட மத்திய அரசு.. இனிமே என்ன பண்றது?

கடந்த ஆகஸ்டு மாதம் கூடிய நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஜி20 கூட்டமைப்பின் 2-ஆம் நாள் கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த கூட்டத்தில் உலகின் வளர்ந்த நாடுகள் பல கலந்துக் கொண்டுள்ளன.. இதேபோன்று, இந்தியாவும் வளர்ந்த நாடாக மாற விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஜூன் மாததத்திற்கு பிறகு, இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால், அது மக்களை பாதிக்காத வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடியின் அரசு எடுத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு நேர்மாறாக மத்திய அமைச்சர் பேசியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பொருளாதார பெருமந்தம், ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News