செய்யாறில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரியாணி மற்றும் வேட்டி சேலை வாங்க 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகரக் கழகத்தின் சார்பில் ஆரணி கூட்டு சாலையில் உள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிய கழக அலுவலகத்தில் பொது மக்களுக்காக இலவச வேட்டி சேலை மற்றும் கோழிக்கறியுடன் சுட சுட பிரியாணி வழங்க ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது எம்ஜிஆரின் திரு உருவப் படத்திற்கு தீபாராதனை காண்பித்த உடன் பிரியாணி மற்றும் வேட்டி சேலை வழங்க துவக்கி வைக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் பிரியாணி மற்றும் வேட்டி சேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அங்கு கூடியிருந்த பெண்கள் திடீரென ஒருவர் மீது ஒருவர் இடித்தபடி பிரியாணி மற்றும் வேட்டி சேலை வாங்க முற்பட்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தள்ளுமுள்ளுவில் இருந்த பெண்களை அப்புறப்படுத்த முடியாமல் திகைத்து ஒதுங்கி நின்றனர்.ஒரு கட்டத்தில் பிரியாணி அண்டாவிலேயே அல்ல முற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து வேட்டி சாலை வழங்குவதை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்யாறில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அதிமுகவினர் வழங்கிய இலவச வேட்டி சேலை மற்றும் பிரியாணியை போட்டி போட்டு வாங்க முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.