தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமானவர் தொல்.திருமாவளவன். ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் ஹாட் ஸ்டார் ஆப் மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், திருமாவளவனை கடுமையாக விமர்சித்து கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதில், “சீறும் சிறுத்தைகள் கடைசியாக வந்து நிற்கிற இடம் கூத்தாடிகளின் பாசறையில். கேடுகெட்ட நிகழ்சியில் வன்மத்தை மட்டும் கக்க விட்ட நிகழ்சியில் ஒரு அரசியல்வாதிக்கு என்ன வேலை ?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், திருமா இப்படி பதிவு வெளியிடுவார் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.