உத்தரபிரதேச மாநிலம் பெதுல் அருகே உள்ள போர்தேஷி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண், ஆண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு, அந்த ஆணிடம் பேசுவதை தவிர்த்த அந்த பெண், வேறொரு ஆணை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
இதனால், அந்த பெண்ணின் மீது முன்னாள் காதலன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் முன்னாள் காதலன், தற்போதைய காதலனை சந்தித்து, தங்களது காதல் கதையை கூறியுள்ளார். இதையடுத்து, கடும் டென்ஷன் ஆன காதலன், முன்னாள் காதலனுடன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு, இருவரும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் மீதும் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ளாத அந்த பெண், ஓடிச் சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த ஆண்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.