தீயில் கருகி உயிரிழந்த 7 வயது சிறுவன்.. பணத்துக்காக கொன்ற தந்தை – மகன்!

ராஜஸ்தான் மாநிலம் பில்லிபங்கா பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்வீர் தாஸ். 36 வயதான இவருக்கு, மான்ப்ரீத் கார் என்ற மனைவியும், ஏக்ஜித் சிங் என்ற 7 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜாஸ்வீர் தாஸிற்கும், போதைப் பொருள் விற்பனை செய்து வரும் பாஜ் சிங் மற்றும் அவரது மகன் சராஜிற்கும் இடையே, பணம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த பிரச்சனை முற்றிய நிலையில், ஜாஸ்வீர் தாஸின் வீட்டின் உள்ளே பெட்ரோலை ஊற்றி அவர்கள் கொழுத்தியுள்ளனர். இதில், வீடு முழுவதும் நெருப்பு படர்ந்து, வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஜாஸ்வீர் தாஸ் மற்றும் அவரது மனைவி, மகன் மீது தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், அதிக தீக்காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலன் இன்றி, ஜாஸ்வீர் தாஸின் மகன் பரிதாபமாக உயிரிழந்தான். தற்போது, ஜாஸ்வீர் தாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News