பொதுமக்களால் தவறவிடப்பட்ட மற்றும் திருடு போன ஐந்து லட்சம் மதிப்பிலான 45 செல்போன்களை தஞ்சை நகர காவல் டி.எஸ்.பி ராஜா தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை மேற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளான பழைய பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேசன், அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களால் தவறவிடப்பட்ட மற்றும் திருட்டு புகார் பெறப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட போலீசார் கண்டுபிடிந்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்ட புகார்தாரர்கள், கண்டுபிடித்து கொடுத்த காவல்துறையினருக்கு நன்றியினையும் , பாரட்டுகளையும் தெரிவித்தனர்.
பொது இடங்களிலும், பயண நேரங்களிலும் தங்களது செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறும் பயன்படுத்தப்பட்ட செல்போன்களை விலைக்கு வாங்கும் போது உரிய ரசீது இல்லாமல் வாங்க கூடாது என்றும் தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா அறிவுறுத்தினார்.