விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது “தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது என்பது வழக்கம். அது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி” என்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலையை பொறுத்தமட்டில் வெறும் வாயில் வடை சுடுகிறவர். அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ, தனித்தோ போட்டியிடட்டும். ஆனால் அவருக்கு தைரியம் இல்லை என்றார். மேலும் தமிழகத்துக்கு சிறு பிள்ளை தனமான அரசியலை கொண்டு வந்தவர் அண்ணாமலை என்றார்.