பொன்னேரி அருகே மின்கசிவால் தீ விபத்து. மூன்று குடிசை வீடுகள் தீயில் கருகின

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியில் திருநங்கைகள் குடியிருக்கும் குடிசை வீடு ஒன்றில் இன்று திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென அருகில் உள்ள இரண்டு குடிசைகளுக்கும் பரவியது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு குடிசைகள் முற்றிலும் எரிந்த நிலையில் தீ பற்றி எரிந்த குடிசையில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் கொண்டு பீச்சி அடிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டில் இருந்து கேஸ் சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், புதிய இரு சக்கர வாகனம் என சுமார் 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News