போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா வியாபாரி..!

தாம்பரம் அருகே பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் பிடிக்க முயன்ற போது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் போதே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக உதவி ஆணையர் சீனிவாசன் தகவல் கிடைத்தது. தகவல் பேரில் மர்ம நபரை பிடிப்பதற்காக தனிபடை அமைத்த போலீசார் பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகபடும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடிக்க முயன்ற போது போலீசாரை பார்த்து யாராக இருந்தாலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். சுதாரித்து கொண்ட உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மேற்கு தாம்பரம் ரங்கனாதபுரம் பகுதியை சேர்ந்த கணேஷன் (50) என்பதும் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கபட்டிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News