வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன், விஜய் நடிக்க உள்ளார். தளபதி 67 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இப்படத்தின் அப்டேட் எப்போது வரும்? என்று பயங்கர ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் படித்த கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கிருந்த மாணவர்கள் பலரும் தளபதி 67 அப்டேட் வேண்டும் என்று கத்தி கூச்சலிட்டனர்.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், என்னுடைய கல்லூரிக்கு வந்துட்டு, அப்டேட் தரலைனா எப்படி என்றும், நிச்சயம் அப்டேட் சொல்கிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும், பெருசா சொல்ல முடியாது. பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் அப்டேட் வரும் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அங்கிருந்த மாணவர்கள், பெரும் உற்சாகம் அடைந்தனர்.