உபியில் தேசிய கீதத்தை அவமதித்த இளைஞர் கைது..!

நேற்று முன்தினம் நாடு முழுவதும் குடியரசு தினம் கொடண்டப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவர் தேசிய கீதம் பாடும் போது அதை அவமதிக்கும் விதமாக ஜாலியாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து இந்த வீடியோ காவல்துறை கவனத்திற்கு சென்றது. அதன்பேரில், வீடியோவில் இருந்த அத்னான், ருஹால் மேலும் ஒரு இளைஞர் ஆகிய மூவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்னானை காவல்துறை கைது செய்த நிலையில், மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகிறது.

RELATED ARTICLES

Recent News