அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாம்.
குறிப்பாக, படத்தின் கிராபிக்ஸ் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவதார் படத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டவர்கள், இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளையும் மேற்கொள்வதாக கூறப்டுகிறது.