சிறுவனை காதலித்த 33 வயது பெண்.. கன்னியாகுமரிக்கு ஓட்டம்.. கைது செய்த போலீஸ்..

17 வயது சிறுவனுடன் கன்னியாகுமரிக்கு தப்பியோடிய திருமணமான பெண்ணை, காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்துாரை சேர்ந்த 17 வயது சிறுவன், செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19-ஆம் தேதி அன்று வேலைக்கு சென்ற சிறுவன், வீடு திரும்பாததால், அச்சம் அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், அந்த சிறுவனுக்கும், அவனுடன் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மகலாட்சுமி என்ற திருமணமான பெண்ணுக்கும், பழக்கம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, கன்னியாகுமரிக்கு தப்பி ஓடிய அவர்கள் இருவரையும், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், அந்த சிறுவனை பெற்றோருடன் அனுப்பி வைத்த காவல்துறையினர், மகாலட்சுமியின் மீது போக்சோ வழக்கை பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News