“பணம் கொடுத்து செட்டில் பண்ணு” – திமுக அமைச்சரின் பகீர் வீடியோ! அதிர வைத்த அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில், வெற்றி பெறுவதற்கு எதிர்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் கட்சி திமுக என்றும், பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று திமுக நம்புகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும் என்று குறிப்பிட்ட அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பணம் கொடுத்து செட்டில் பண்ணுங்க.. போன்ற பகீர் தகவல்களை அமைச்சர் கே.என்.நேரு பேசுவது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News