கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்படம் சார்ந்த படிப்பு பயின்று வருகிறார். இது குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய விஜய், சஞ்சய் திரைத்துறையில் நுழைய விரும்புவதாகவும், இதற்காக முன்னணி இயக்குனர்களிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார். தற்போது சஞ்சய் குறும்படம் இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஜேசன் சஞ்சய் தனது வகுப்பு தோழர்களுடன் இணைந்து ஒரு குறும்படத்தை இயக்குகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தாத்தா எஸ் ஏ சந்திரசேகரைப் போலவே ஒரு புகழ் பெற்ற டைரக்டராக வருவார் என பாராட்டி வருகின்றனர்.