நாய் தொல்லையை கட்டுப்படுத்த நாய்கள் போல் குறைத்து ஆர்ப்பாட்டம்..!

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வெறி நாய் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லாவரம் மண்டலத்தில் நாய்கள் போல் குறைத்து கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் தேசிய கொடியின் கீழ் தங்களது கோரிக்கை மனுவை வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூசன் முடிந்து சகோதரியுடன் வீட்டிற்கு சென்ற பிளஸ் 1 மாணவியை வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதால் பயந்து வேகமாக சென்ற மாணவி கீழே விழுந்து தலை, கண்ணத்தில் காயமடைந்தார். உடன் பயணித்த அவரது சகோரரிக்கும் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்தது தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெரு நாய்கள் தொல்லைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சந்தானம் தலைமையில் அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல அலுவலகத்தின் நுழைவாயலில் வெறி நாய்களை கட்டுபடுத்த கூறி கோசங்களை எழுப்பினர்.

பின்பு புகார் மனுவை அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக நாய்களைப் போல குறைத்து கொண்டு சென்றனர். இதனால் அலுவலக வளாகத்தில் இருந்த நாய்கள் இவர்களை பார்த்து குறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால், மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய கொடியின் கீழ் கோரிக்கை மனுவை வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News