நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது : குடியரசுத்தலைவராக பழங்குடியின பெண் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது, அரசியலமைப்புக்கே பெருமை என்றார்.
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது ஆக்கப்பூர்வ கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என நம்புவதாகவும் இந்த பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.