இந்தியாவில் 5G சேவைகளின் முன்னோடியாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரே நாளில் கூடுதலாக 34 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவைகளை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் 19 நகரங்களில் ட்ரூ (TRUE) 5G சேவை கிடைக்கிறது.