தமிழகத்தை சேர்ந்த சுதா ஜாஸ்மீன் என்ற பெண், வறுமையின் காரணமாக, ஓமன் நாட்டில், வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். ஆனால், அவர் அங்கு சுமார் 21 மணி நேரங்கள் ஒரு நாளைக்கு வேலை செய்துள்ளார்.
இதனை பொறுத்துக்கொள்ளாத சுதா ஜாஸ்மீன், தன்னை மீட்கும்படி வீடியோ வெளியிட்டு, கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது அந்த பெண், ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது பின்வருமாறு:-
“வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து கொடுமை அனுபவிக்கும் தமிழர்களை மீட்க உதவி செய்ய முதலமைச்சர் திமுக அயலக அணி உருவாக்கினார். தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் உதவிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு உள்ள தமிழர்கள் யார் எந்த நாட்டில் உள்ளனர் என்ற பட்டியல் இல்லை. இதற்காக ஒரு செயலி உருவாக்கி வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். செயலி முலம் விவரங்களை சேகரிக்கப்படும். இந்த திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.