நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக, இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
1. ஏழைகளுக்கான உணவு திட்டத்துக்கு அடுத்த ஓராண்டுக்கு 2 லட்சம் கோடி ஒதுக்கீடு
2. 11.4 கோடி விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
3. 9.6 கோடி சமையல் கேஸ் இணைப்புகள், 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
4. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் உயரும். இது மற்ற நாடுகளை விட மிக அதிகம். பிரதமரின் காப்பீடு திட்டங்களால், 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது. நல்ல எதிர்காலம் நமக்கு உள்ளது.
5. விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட்-அப்-கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு அந்த உரையில், நிர்மலா சீதாராமன் பேசினார்.