இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தங்கத்துக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்தது.
இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டதால் தங்கம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 55ரூபாய் உயர்ந்து 5,415 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் உயர்ந்து 43,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் ரூ.76 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.