சென்னை குரோம்பேட்டை அடுத்த போஸ்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி சொந்தமாக தண்ணீர் கம்பனி நடத்தி வருகிறார்.
கடந்த 25ம் தேதி வீட்டில் நிறுத்தி வைக்கபட்டிருந்த சொகுசு கார் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தேன்மொழியின் சகோதரர் ஐ.டி ஊழியரான ஆதிநாராயாணன் (26) காரை திருடி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து ஆதி நாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜமீன் ராயபேட்டையை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய இருவரை கைது செய்து நன்மங்கள் ஏரிகரை பகுதியில் பதுக்கி வைக்கபட்டிருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஆதினாராயனனிடம் போலீசார் நடத்திய விசாரனையில் சொத்துகள் அனைத்தையும் தனது தந்தை கணேசன் சகோதிரியின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டதால் சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடி சென்றதாக ஒப்புகொண்டார். இதையடுத்து ஆதிநாராயாணன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.