பழனியில் 24 அடி வேல் சிலையை அகற்றிய அதிகாரிகள்…பக்தர்கள் அதிர்ச்சி

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தைப்பூசத்தின் போது சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினாலான வேல் சிலையை அங்கு வைத்து திருவிழா முடிந்த பின் அகற்றுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் வேல் சிலை அங்கு வைக்கப்பட்டது.

கோயிலில் வழக்கம்போல வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிகாலை அந்த சிலை அகற்றப்படும் என அறிக்கை அளித்தனர்.

இந்நிலையில் பலத்த காவல் பாதுகாப்புடன் ஜேசிபி, கிரேன் உதவி கொண்டு சிலையின் பீடம் தகர்க்கப்பட்டது. வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த வேல் சிலை திடீரென அகற்றப்பட்டதால் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

RELATED ARTICLES

Recent News