தளபதி 67 படத்தின் டைட்டில் இதுவா? கண்டுபிடித்த ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் பெயரை தளபதி 67 என்று குறிப்பிடுவது இன்று தான் கடைசி நாளாக இருக்கும். காரணம் என்னவென்றால், இன்று மாலை 5 மணிக்கு, இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

என்னதான் படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தாலும், விஜய் ரசிகர்கள் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று யூகித்து வருகின்றனர். அதன்படி, படத்திற்கு EAGLE என்று பெயர் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த டைட்டில் இல்லை என்றால், நான் வாழும் உலகம் என்று டைட்டில் வைக்க இருப்பதாக கூறி வருகின்றனர்.

EAGLE என்ற பெயரை ரசிகர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்றால், தளபதி 67 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியானது. அதில், ரத்தம் முகத்தில் சிதறியவாறு விஜய் இருந்தார்.

மேலும், அவர் அந்த புகைப்படத்தில் கொடுத்திருந்த Pose பார்ப்பதற்கு கழுகு மாதிரி இருப்பதாகவும், இதனை லோகேஷ் கனகராஜ் Hidden Layer-ஆக கூறிவிட்டார் என்றும் கூறி வருகின்றனர். ரசிகர்கள் தங்களது Creativity-யை பயன்படுத்தி இதையெல்லாம் கண்டுபிடித்தாலும், இன்று மாலை 5 மணிக்கு தான், உண்மையான டைட்டில் என்னவென்பது தெரியவரும்.

RELATED ARTICLES

Recent News