நிர்வாணமாக தெருக்களில் அழையும் பெண்.. வீட்டின் கதவை தட்டும் சிசிடிவி வெளியீடு!

இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் ரசிக்க வைக்கும். ஆனால், ஒரு சில வீடியோக்கள் தான் அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும். அப்படியான வீடியோ ஒன்று தான், இணையத்தில் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெரு ஒன்றில் வசித்து வரும் நபர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர், நிர்வாணமாக தெருக்களில் திரிகிறார் என்றும், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அன்று, தன் வீட்டின் கதவை அந்த பெண் தட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அந்த பெண் யார்? எதற்காக இவ்வாறு நிர்வாணமாக சாலைகளில் அழைந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பெண்ணை யாராவது பார்த்தால், காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசி வரும் உள்ளூர்வாசிகள், அந்த பெண்ணிற்கு மனநலம் சரியில்லாமல் இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News