Connect with us

Raj News Tamil

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

சினிமா

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாது ஹாலிவுட் வரை நடித்துள்ள இவர், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தனுஷ் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டதாகவும்,விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல், கவுரவ தோற்றத்திலும் நடிக்க உள்ளார். ஏற்கனவே ப.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top