திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா 4.00 மணி அளவில் தேரோட்ட நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து பகுதிகளில் இருந்தும் நடைபயணமாக பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக மேளதாளத்துடன் காவடிகளை சுமந்தவாறு ஆடிப்பாடி கொண்டாடி பழனி நகருக்கு வருகை புரிந்துள்ளனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பாக நடை பயணமாக வரும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து அரசு துறை நிர்வாகங்கள் சார்பாக திருக்கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு பணியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.